தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லடாக்கின் உம்லிங் லா வரை சைக்கிளில் பயணித்து இளம்பெண் சாதனை!

டெல்லியில் இருந்து லாடாக்கின் உம்லிங்லா வரை முதன்முறையாக சைக்கிளில் பயணித்து இளம்பெண் ஒருவர் சாதனை புரிந்துள்ளார்.

லடாக்கின் உம்லிங்லா வரை சைக்கில் பயணித்து இளம்பெண் சாதனை!
லடாக்கின் உம்லிங்லா வரை சைக்கில் பயணித்து இளம்பெண் சாதனை!

By

Published : Jul 2, 2022, 3:02 PM IST

டெல்லி:உம்லிங் லா சாலை கஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 19 ஆயிரத்து 300 மீட்டர் அடி உயரத்தில் உள்ளது. உலகிலேயே உயரமான சாலைகளில் ஒன்றாக இருப்பதால், இதில் பயணிப்பது கடினமானதாக கருதப்படுகிறது. அதுவும் சைக்கிளில் பயணிப்பது மிகவும் கடினமான சவால் ஆகும்.

இந்நிலையில் சவித்தா மேக்தோ(28) எனும் கொல்கத்தாவைச் சேர்ந்த பெண் உம்லிங் லா சாலையை சைக்கிளில் பயணம் செய்து அடைந்து உம்லிங் லா-வை அடைந்த முதல் இந்தியப்பெண் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.

ஜூன் 5ஆம் தேதி டெல்லியில் இருந்து தன்னுடைய பயணத்தைத் தொடங்கிய அவர் 23 நாட்கள் பயணம் செய்து ஜூன் 28 ஆம் தேதி உம்லிங் லா-வை அடைந்தார்.

இதுகுறித்துப் பேசிய சவித்தா 'தன்னுடைய குடும்பத்தாரின் உதவியின் மூலம் மட்டுமே தன்னால் இதைச் சாதிக்க முடிந்தது. அவருடைய குடும்பம் ஏழ்மையான நிலையிலிருந்தபோதிலும் நிதிப்பற்றாக்குறையையும் தாண்டி இதை சாதித்திருப்பதன் நோக்கம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் ஊக்கப்படுத்துவதற்காகவும் தான்' என்றார்.

இதையும் படிங்க:சுவையான மிளகாய் பஜ்ஜி செய்முறை வீடியோ...

ABOUT THE AUTHOR

...view details