தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஏப்ரல் 28க்கு பிறகு நியூசிலாந்து விதித்த தடை நீக்கப்படும் என நம்புகிறோம் -  வெளியுறவு அமைச்சகம் - கரோனா வைரஸ்

டெல்லி: ஏப்ரல் 28ஆம் தேதிக்குப் பிறகு, இந்தியப் பயணிகளுக்கு நியூசிலாந்து விதித்த தடை நீக்கப்படும் என நம்புவதாக வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி தெரிவித்துள்ளார்.

New Zealand'
வெளியுறவு அமைச்சகம்

By

Published : Apr 9, 2021, 10:21 AM IST

கரோனா தொற்று அதிகரித்து வருவதால், இந்தியப் பயணிகளுக்கு தடை விதிப்பதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் அறிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து நியூசிலாந்து சென்ற 17 பயணிகளுக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி கூறுகையில், " ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 28 வரை, இந்திய பயணிகளுக்குத் தடை விதித்துள்ளதாக நியூசிலாந்து அரசிடமிருந்து தகவல் வந்தது. இது தற்காலிகமான தடை எனக் கூறியுள்ளனர்.

இந்தத் தடை இந்தியர்களுக்கு மட்டுமின்றி நியூசிலாந்து நாட்டினருக்கும் பொருந்தும். ஏப்ரல் 28க்கு பிறகு, இந்தத் தடை நீக்கப்படும் என நம்புகிறோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஐஐடி ரூர்க்கியில் 90 மாணவர்களுக்கு கரோனா... விடுதிகளுக்குச் சீல் வைப்பு

ABOUT THE AUTHOR

...view details