ஓணம் பண்டிகையையொட்டி கேரள மாநில மக்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கம் வலுப்பெறட்டும் - பிரதமர் ஓணம் வாழ்த்து - ஓணம் வாழ்த்து
கேரள மக்களுக்கும் உலகம் முழுவதும் உள்ள் மலையாள மக்களுக்கும் இந்திய பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் மலையாளத்தில் ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஓணம் நமது சமுதாயத்தில் நல்லிணக்க உணர்வை மேலும் வலுப்படுத்தட்டும் - பிரதமர் மோடி
இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், “கேரள மக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள மலையாள மக்களுக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள். இந்த திருவிழா இயற்கை அன்னையின் முக்கிய பங்கையும், கடின உழைப்பாளிகளான விவசாயிகளின் முக்கியத்துவத்தையும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஓணம் நம் சமூகத்தில் நல்லிணக்க உணர்வை மேலும் வலுப்படுத்தட்டும்” இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க:"இந்துக்கள் கபடவாதிகள்" - குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ் விராத் சர்ச்சைப் பேச்சு