ஹல்த்வானி(உத்தரகாண்ட்): உத்தரகாண்ட் மாநிலம், ஹல்த்வானியைச்சேர்ந்த இளம்பெண்ணுக்கும், அல்மோராவைச்சேர்ந்த இளைஞருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதைத் தொடர்ந்து நவம்பர் 5ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது. இருதரப்பினரும் பத்திரிகை அடித்தனர். திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.
மணப்பெண்ணுக்கு லெஹங்கா வாங்கும் பொறுப்பு மணமகன் தரப்புக்கு கொடுக்கப்பட்டது. அதன்படி, மணமகனின் தந்தை லக்னோவில் இருந்து லெஹங்காவை ஆர்டர் செய்திருந்தார். லெஹங்காவின் விலை 10ஆயிரம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. இதனை மணமகள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
லெஹங்காவைப் பார்த்த மணப்பெண் தனக்குப் பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், மணப்பெண் திருமணத்தை நிறுத்த முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த அக்டோபர் 30ஆம் தேதி திருமணம் நிறுத்தப்பட்டதாக அறிவித்தனர்.