கோலாரில் மார்கதர்சி நிறுவனத்தின் 22வது கிளை துவக்கம்! பெங்களூரு:மார்கதர்சி சிட் ஃபண்ட் நிறுவனம், 1962ஆம் ஆண்டில் ஹைதராபாத்தில் 2 ஊழியர்களுடன் சிறு நிறுவனமாக தொடங்கப்பட்டது. தற்போது தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகளை இந்நிறுவனம் கொண்டுள்ளது. 60 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு நிதி சேவைகளை வழங்கும் பணிகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 109 கிளைகளை கொண்டு உள்ள மார்கதர்சி நிறுவனம், கர்நாடக மாநிலத்தின் கோலார் சிட்டி பகுதியில், 22வது கிளையினை துவக்கி உள்ளது. இதுதொடர்பாக, மார்கதர்சி சிட் நிறுவனத்தின் இயக்குநர் பி.லெட்சுமண ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்ட மக்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், மார்கதர்சி நிறுவனத்தின் 22வது கிளையினை, கோலார் சிட்டி பகுதியில் துவக்கி உள்ளோம்.
நடப்பு ஆண்டின் அக்டோபர் மாதத்தில், ஹவேரி சிட்டி பகுதியில், புதிய கிளை திறக்க திட்டமிட்டப்பட்டு உள்ள நிலையில், அதற்கான சட்டப்பூர்வ அனுமதியும், கர்நாடக மாநில அரசிடம் இருந்து பெறப்பட்டு உள்ளது. அதேபோல்,நாட்டின் மூன்றாவது செல்வச் செழிப்பு மிக்க நகரமான பெங்களூருவில், இந்த நிதியாண்டிற்குள் மேலும் இரண்டு புதிய கிளைகளை துவக்க திட்டமிட்டு உள்ளோம்.
கர்நாடக மாநில மக்களுக்கு சிறந்த நிதி நிறுவன சேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், மார்கதர்சி நிறுவனம் எப்போதும் அவர்களின் நம்பகமான நிறுவனமாக மட்டுமல்லாது, நல்ல நிதிப் பங்காளியாகவும் விளங்கி வருகிறது. கர்நாடக மாநில மக்களிடையே, தங்களது நிறுவனத்தின் தேவைகள் மிக அதிக அளவில் உள்ளதால், இங்கு 50 கிளைகளைத் துவக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனை அடுத்து, நிறுவனத்தின் சேவை விரிவாக்கத்திற்கு தாங்கள் தயாராக உள்ளோம்.
மார்கதர்சி நிறுவனத்தின் கோலார் கிளையில், மாத சந்தா ரூ.2 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலான 25, 30, 40 மற்றும் 50 மாதங்கள் கால அளவிலான ரூ.1 லட்சம் முதல் ரூ.30 லட்சம் மதிப்பிலான சிட்கள் உள்ளன.கோலார் கிளை, ரு.19 கோடி அளவிலான நிதிச் சேவைகள் மேற்கொண்டு உள்ள நிலையில், இந்த மாதத்திற்குள், வர்த்தகம் ரூ.26 கோடி என்ற அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கிளையின் மேலாளர் ஹரிபிரசாத் மற்றும் ஊழியர்கள், கடந்த 3 மாதங்களில் மேற்கொண்ட கடின உழைப்பின் பலனாக இது பார்க்கப்படுகிறது. இந்த கிளையின் மூலம், மக்கள் மேலும் பயன் அடையும் வகையில், புதிய சிட்கள் துவங்கப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: "மார்கதர்சி சிட்பண்ட் ஆர்பிஐ விதிகள் படியே இயங்குகிறது" - ஆந்திர போலீசாரால் சந்தாதாரர்களுக்கு தொல்லை என புகார்!