ஐதராபாத் :ஆந்திர பிரதேச சிஐடி போலீசார் மார்கதர்சி சிட்பண்ட் சந்தாதாரர்களை துன்புறுத்துவதாகவும், சட்டவிரோத நோக்கில் விசாரணை நடத்துவதாகவும் மார்கதர்சி சிட்பண்ட் நிறுவனம் குற்றஞ்சாட்டி உள்ளது. ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்டு உள்ள அனைத்து வணிக வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி வருவதாகவும், எந்த வருமான வரி விதிகளையும் மீறவில்லை என்றும் தெரிவித்து உள்ள மார்கதரசி சிட்பண்ட் நிறுவனத்தின் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டு உள்ள அனைத்து சந்தாதாரர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளது.
ஆந்திரப் பிரதேச குற்றப் புலனாய்வுத் துறை போலீசார், தங்களது சந்தாதாரர்களுக்கு முற்றிலும் நம்பகத்தன்மையற்ற, பொய்யான மற்றும் எந்த தகுதியும் இல்லாத கூற்றுகளின் அடிப்படையில் நோட்டீஸ் அனுப்பி துன்புறுத்துவதாக மார்கதர்சி சிட்பண்ட் நிறுவனம் குற்றஞ்சாட்டி உள்ளது.
இதுகுறித்து மார்கதர்சி சிட்பண்ட்(margadarsi chit fund) நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "சிட்பண்ட் வணிகத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பிற்குள் மார்கதர்சி நிறுவனம் தனது வணிகத்தை மிகவும் விவேகத்துடன் நடத்தி வருவதாகவும், நிதி ஒழுக்கம் தான் எங்களின் பலம் என்றும், எந்த நேரத்திலும் விதிகளை மீறுவதற்கு இடமளிக்க மாட்டோம்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தாதாரர்கள் நெட்வொர்க் மற்றும் மார்கதர்சி நிறுவனத்தின் வணிக நம்பகத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் சட்டவிரோத நோக்கத்தில் ஆந்திர பிரதேச சிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருவதாக அந்நிறுவனம் குற்றஞ்சாட்டி உள்ளது. சந்தாதாரர்களிடையே பீதியை உருவாக்குவதற்கும், அனைவரையும் துன்புறுத்தும் நோக்கத்துடனும் அவர்கள் சிட் உறுப்பினர்களாக உறுதி செய்யப்பட்ட பின்னரும் அவர்களது தனிப்பட்ட விவரங்களை ஆந்திர பிரதேச சிஐடி போலீசார் கேட்டு வலியுறுத்துவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், சந்தாதாரர்கள் இடையேயான இணைப்பு மற்றும் மார்கதர்சி நிறுவனத்தின் வணிகத்தை சேதப்படுத்தும் வகையில் சட்டவிரோத நோக்கத்துடன் ஆந்திர சிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருவதாக நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த அறிக்கை அனைத்து சாந்தாதாரர்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் விதமாகவும், குறிப்பாக மார்கதர்சி சிட்பண்ட் நிறுவனத்தில் நிதி முறைகேடுகள் நடந்ததாக ஆந்திர பிரதேச சிஐடி போலீசாரால் விசாரணை நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தாதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் அவர்களுக்கு உறுதி அளிக்கும் விதமாகவும் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மார்கதர்சி நிறுவனத்தின் தனிப்பட்ட உரிமைகளில் தலையிட தெலங்கானா உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவை மீறி நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை முற்றிலும் அலட்சியப்படுத்தும் வகையில் ஆந்திர பிரதேச சிஐடி போலீசாரின் நடவடிக்கை உள்ளதாக மார்கதர்சி நிறுவனம் குற்றஞ்சாட்டி உள்ளது.
தெலங்கானா நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறி, ஆந்திர பிரதேச சிஐடி போலீசார், மாநிலம் முழுவதும் உள்ள நிறுவனத்தின் அனைத்து வாடிக்கையாளர்களையும் துன்புறுத்தும் வகையிலும், நிறுவனத்தை இழிவுபடுத்தும் ஒரே நோக்கத்துடன் மீண்டும் மீண்டும் பத்திரிகைக் குறிப்புகளை வெளியிட்டு வருவதாக மார்கதர்சி சிட்பண்ட் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆந்திர பிரதேச சிஐடி போலீசார் வெளியிட்டு உள்ள அறிக்கைகள் கற்பனை செய்யப்பட்ட மீறல்கள் என்றும் முற்றிலும் திட்டமிடப்பட்டவை, தவறானவை மற்றும் எந்த தகுதியும் இல்லாதவை என்றும் மார்கதர்சி நிறுவனம் தெரிவித்து உள்ளது. சிட்பண்டுகள் சட்டம் 1982, வருமான வரிச் சட்டம் மற்றும் அனைத்து பொருந்தக்கூடிய பிற சட்டங்கள் உள்பட சிட்பண்ட் வணிகத்தை நிர்வகிக்கும் விதிமுறைகளை மீறும் எந்த விதமான நடவடிக்கைகளிலும் மார்கதர்சி ஒருபோதும் ஈடுபட்டதில்லை என்பதை சந்தாதாரர்களுக்கு மீண்டும் உறுதியளிப்பதாக மார்கதரசி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
மார்கதர்சி நிறுவனம் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வரி விதிக்கப்படுவதாகவும், அனைத்து இணக்கங்களையும் முழுமையாக உறுதிப்படுத்துவதால் மீறல்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்றும் மார்கதர்சி நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :பாகிஸ்தான் பெண் உளவாளிக்கு ரகசியங்கள் கசியவிட்டதாக புகார்.. மத்திய வெளியுறவு அமைச்சக ஊழியர் கைது!