தெலங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தில் நேற்று (டிச.30) ஒரு நக்சலைட் தம்பதியினர் சரணடைந்ததாக வாரங்கல் காவல் துறையினர் தெரிவித்தனர். நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த யலாம் நரேந்தரை பிடித்துத் தருவோருக்கு நான்கு லட்சம் ரூபாய் வெகுமதியாக அளிக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
வாரங்கல்லில் நக்சலைட் தம்பதி சரண்!
ஹைதராபாத் : வாரங்கல் காவல் துறையினரிடம் நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த தம்பதியினர் சரணடைந்துள்ளனர்.
இந்நிலையில் நரேந்தர் தனது மனைவியுடன் காவல் ஆணையர் பி.பிரமோத் முன்னிலையில் நேற்று (டிச.30) சரணடைந்தார். சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நரேந்தர் (32), தற்போது தெலங்கானாவில் வஜெடு வெங்கடபுரம் பகுதியில் உள்ள நக்சலைட் குழுவின் தளபதியாகப் பணியாற்றியுள்ளார்.
சரணடைந்த நரேந்தர் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட சட்டவிரோதக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். இவரது மனைவி 2018ஆம் ஆண்டு நக்சலைட் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு தகவல் தொடர்புப் பிரிவில் செயல்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர், ’இருவரும் பொது சமூகத்துடனும் குடும்பத்துடனும் இணைந்து வாழ விரும்பியே இந்த முடிவை எடுத்துள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளனர்.