தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாவோயிஸ்ட் முக்கியத் தலைவர் ராமகிருஷ்ணா இறப்பு! - மாவோ

மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராமகிருஷ்ணா உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

MAOIST Central Commite Member RK DEAD, மாவோ ராமகிருஷ்ணா
MAOIST Central Commite Member RK DEAD

By

Published : Oct 14, 2021, 9:23 PM IST

ஹைதராபாத் (தெலங்கானா):மாவோயிஸ்ட் இயக்கத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய பொறுப்புகளில் இருந்த ஆக்கிராஜு ஹரகோபால் எனும் ராமகிருஷ்ணா (ஆர்.கே என்றும் அழைக்கப்படுவார்) உடல் நலக் குறைவால் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சத்தீஸ்கரின் தெற்கு பஸ்தார் காட்டில் வைத்து அவர் உயிர் பிரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள்பட்ட நோயால் ஆர்.கே. அவதிபட்டு வந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்து மரணமடைந்துள்ளார்.

ஆந்திர முதலமைச்சராக ஒய்.எஸ்.ஆர் ராஜசேகர ரெட்டி இருந்த 2004ஆம் ஆண்டு காலகட்டத்தில், மாவோயிஸ்ட் இயக்கம் அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட முக்கியக் காரணமாக இருந்தவர், ஆர்.கே. என்பது நினைவுகூரத்தக்கது.

மாவோ ராமகிருஷ்ணா

இதே ஆண்டு மே மாதத்தில், ராமகிருஷ்ணா மீது தேசியப் புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து, அவரை தீவிரமாகத் தேடிவந்தது குறிப்பிடத்தக்கது.

இச்சூழலில், எங்கும் பிடிபடாமல் இருந்த அவர், தற்போது மரணமடைந்துள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தி, மாவோ ஆதரவாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இதையும் படிங்க:மேலும் ஐந்து நாள்கள் ஆர்யன் கானுக்கு சிறைவாசம்

ABOUT THE AUTHOR

...view details