டெல்லி:இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களாக கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி கரோனா பாதிப்பு 1000-க்கும் மேல் பதிவாகி வருகிறது.
இந்தநிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், தடுப்பூசி திட்டம் குறித்தும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உயர் அலுவலர்களுடன் இன்று (ஜூன் 23) ஆலோசனை மேற்கொண்டார். அப்போது,"வயதானவர்கள், தகுதிவாய்ந்த நபர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். பள்ளி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
கரோனா தொற்று அதிகம் பதிவாகும் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தி, ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். கரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். கரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார்.