தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மணிப்பூரில் மெய்தி, குக்கி, நாகா சமூகத்திற்கு அதிகாரப் பகிர்வு வழங்க வேண்டும்: நேதாஜி மருமகன் சுகதா போஸ் கருத்து! - மணிப்பூர் கலவரம்

Netaji's nephew Prof Sugata Bose: மணிப்பூர் மாநிலத்திலுள்ள மெய்தி, குக்கிகள் மற்றும் நாகா ஆகிய மூன்று சமூகத்திற்கு முறையான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த வேண்டும் என நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருமகன் பேராசிரியர் சுகதா போஸ் தெரிவித்துள்ளார்.

manipur-needs-a-just-power-sharing-arrangement-netajis-nephew-sugata-bose
நேதாஜி மருமகன் சுகதா போஸ்: மணிப்பூரில் மெய்தி, குக்கி, நாகா சமூகத்திற்கு அதிகாரப் பகிர்வு வழங்க வேண்டும்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2023, 5:10 PM IST

கொல்கத்தா: மணிப்பூரில் மெய்தி சமூகத்தினர் மற்றும் பழங்குடியினரான குக்கி சமூகத்தினர் இடையே இட ஒதுக்கீடு தொடர்பாகக் கடந்த மே 3ஆம் தேதி ஏற்பட்ட பிரச்சனை வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த கலவரத்தில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக நடுரோட்டில் இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தற்போது வரை மணிப்பூரில் கலவரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்திலுள்ள மெய்தி, குக்கிகள் மற்றும் நாகா ஆகிய மூன்று சமூகத்தினர் இடையே முறையாகப் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த வேண்டும் என நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருமகன் பேராசிரியர் சுகதா போஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள், "மணிப்பூர் மாநிலத்தின் நிலைமை மிகத் துயரமானது என்றும், அங்கு வசிக்கக் கூடிய மெய்தி, குக்கிகள் மற்றும் நாகா ஆகிய மூன்று சமூகங்களுக்கு நியாயமான அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டைச் செய்ய வேண்டும். மேலும் மூன்று சமூகத்தைச் சேர்ந்த மக்கள் 1944ல் நேதாஜியின் ஐ.என்.ஏ (INA) இணைந்து இந்தியாவுக்காகப் போராடியுள்ளனர் எனத் தெரிவித்தார்.

மெய்தி, குக்கிகள் மற்றும் நாகா ஆகிய மூன்று சமூகங்களையும் அழைத்து அவர்களின் குறைகளைக் கேட்டு அதனை நிவர்த்தி செய்ய வேண்டும். மூன்று சமூகங்களையும் மீண்டும் ஒன்று சேர்க்க முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும் எனக் கூறினார். மணிப்பூர் மாநிலத்தில் 53 சதவீதம் மெய்தி சமூகத்தினர்கள் பெரும்பாலும் இம்பால் பள்ளத்தாக்கில் வாழ்ந்து வருகின்றனர். 40 சதவீதம் பழங்குடியினரான நாகா மற்றும் குக்கி இன மக்கள் இம்பால் மலையைச் சுற்றியுள்ள மலை மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தைத் தாக்குவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. மணிப்பூர் கலவரம் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நடத்தப்படுகின்றன எனத் தெரிவித்தார். மணிப்பூர் கலவரத்தினால் கடந்த ஐந்து மாதங்களில் மெய்தி சமூகம் மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் இதுவரை 175க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும் நிலங்களையும் இழந்து அகதிகளாக முகாம்களில் உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

எனவே, மணிப்பூர் மாநிலத்திலுள்ள மெய்தி, குக்கிகள் மற்றும் நாகா ஆகிய மூன்று சமூகத்தினர் இடையே முறையாகப் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஜூலை 1944ல், குக்கி மக்கள் அதிகம் வசிக்கும் சுராசந்த்பூர் பகுதியிலிருந்த ஐஎன்ஏ முகாமிற்கு முன்னணிப் படைகளைப் பார்வையிடச் சென்று அங்குள்ள கிராம மக்களுடன் உரையாடியதாகவும் ஒரு பதிப்பு உள்ளது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:புதுச்சேரியில் செவிலியர்கள் விடிய விடிய போராட்டம் - இருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details