தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குறைவாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள 3 மாநிலங்கள் - அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை - புதுச்சேரி தடுப்பூசி நிலவரம்

நாட்டில் குறைவாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள மூன்று மாநில அரசுகள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா (Union health Minister Mansukh Mandaviya) ஆலோசனை மேற்கொண்டார்.

அமைச்சர்
அமைச்சர்

By

Published : Nov 22, 2021, 7:52 PM IST

டெல்லி:நாட்டில் கரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்க 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி (Covid 19 vaccine) செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு தவணை முறைகளில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அண்மையில் இந்தியா 100 கோடி டோஸ் தடுப்பூசி என்ற எண்ணிக்கையை எட்டி சாதனை படைத்தது. ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.

இந்தநிலையில் தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்டுள்ள மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து மற்றும் புதுச்சேரி சுகாதாரத்துறை அலுவலர்களிடம் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா (Union health Minister Mansukh Mandaviya) இன்று (நவ.21) காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, "தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்த வேண்டும். தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். தகுதியுடையவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும் அனைத்து மாநில அரசுகளும் மக்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்வதை ஊக்கப்படுத்த வேண்டும். இரண்டாம் தவணை எடுத்துக் கொள்ளாதவர்களை விரைவில் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்த வேண்டும் என்று கூறினார்.

இந்தியாவில் முதல் தவணை தடுப்பூசி 82 சதவீதம் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசி 43 சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். இதில், புதுச்சேரியில் முதல் தவணை தடுப்பூசி 66 சதவீதம் பேரும், இரண்டாவது தவணை தடுப்பூசி 39 சதவீதம் பேரும் எடுத்துக் கொண்டுள்ளனர்.

அதேபோல், நாகாலாந்து (49 விழுக்காடு, 36 விழுக்காடு), மேகாலயா (57 விழுக்காடு, 38 விழுக்காடு), மணிப்பூர் (54 விழுக்காடு, 36 விழுக்காடு) நபர்கள் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: நடிகர் கமல்ஹாசனுக்கு கரோனா - விரைவில் குணமடைய ஸ்டாலின் வாழ்த்து

ABOUT THE AUTHOR

...view details