தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரியாணியால் பிரச்னை... போதையில் கஷ்டமரை கத்தியால் குத்திய கடைக்காரர் - உத்தர பிரதேசம்

உத்தரப்பிரதேசத்தில் சாப்பிட்ட பிரியாணிக்கு காசு கொடுத்த விவகாரத்தில், வாடிக்கையாளரை உணவக உரிமையாளர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரியாணியால் பிரச்சனை
பிரியாணியால் பிரச்சனை

By

Published : Aug 19, 2022, 4:59 PM IST

லக்னோ(உத்தரப்பிரதேசம்):உத்தரப்பிரதேசத்தில் ஜலான் மாவட்டத்தில் ராம் சிங் என்பவர், உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த உணவகத்தில் ராம்ஜி என்பவர் பிரியாணி சாப்பிட வந்துள்ளார்.

முதலில் பிரியாணிக்கு காசு கொடுத்தது தொடர்பாக கடை உரிமையாளர் ராம் சிங்கிற்கும், சாப்பிட வந்த ராம்ஜிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு கைகலப்பாக மாறி, கடை உரிமையாளர் ராம்‌ சிங், சாப்பிட வந்த ராம்ஜியைக் கத்தியால்‌ குத்தியுள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் தப்பிச் சென்றார்.

சம்பவம் நடந்தபோது இருவரும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. வயிற்றில் பலமுறை கத்தியால் குத்தியதில், ராம்ஜி பலத்த காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதுகுறித்து போலீசார் ராம்ஜிடம் நடத்தி விசாரணை மேற்கொண்டனர். முதலில், கடைக்கு வந்த ராம்ஜி, கடை உரிமையாளர் ராம்‌ சிங்கிடம் பிரியாணிக்கு 50 ரூபாய் கொடுத்துவிட்டு சாப்பிடச்சென்றதாக போலீசாரிடம் ராம்ஜி தெரிவித்துள்ளார்.

அடுத்து சாப்பிட்டு வந்த பின்னர் ராம் சிங் மீண்டும் தன்னிடம் 50 ரூபாய் கேட்டதாகவும் தான் ஏற்கெனவே பிரியாணிக்கு காசு கொடுத்துவிட்டதாகவும் ராம்ஜி, கடை உரிமையாளரிடம் கூறியுள்ளார். ஆனால், அதை மறுத்த அவர், பிரியாணிக்கு காசு தரவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

தற்போது தலைமறைவாக உள்ள ராம் சிங்கை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:சொத்து தகராறில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு...ஒருவர் பலி

ABOUT THE AUTHOR

...view details