தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாய் மலம் கழித்ததால் தகராறு: ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு - உத்தரப் பிரதேச செய்திகள்

வீடு கட்டுவதற்காக வாங்கிய மணலில் நாய் மலம் கழித்ததால் இருவீட்டாருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நாய் உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டதில், ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு
துப்பாக்கிச் சூடு

By

Published : Jun 21, 2022, 8:14 PM IST

முசாபர்நகர் (உத்தரப் பிரதேசம்): உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுக்ராம்பால் என்பவர் திடாவி கிராமத்தில் உள்ள தனது நிலத்தில் வீடு கட்டி வந்துள்ளார். இதற்காக அங்கு மணல் வாங்கி வைத்துள்ளார்.

இந்தநிலையில் அண்டை வீட்டில் வசிக்கும் ஆஷு என்பவரின் நாய், சுக்ராம்பால் வீடு கட்டுவதற்காக வைக்கப்பட்டுள்ள மணலில் மலம் கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவ்வப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், நேற்றும்( ஜூன் 20) இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஆஷு, துப்பாக்கியால் சுக்ராம்பாலை நோக்கி சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சைப் பெற்று வருகிறார்.

தலைமறைவாக உள்ள ஆஷுவை காவல் துறையினர் தேடி வருகின்றனர். சுக்ராம்பால் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ரூ.1.50 லட்சம் பணப்பையும்... கவ்விச் சென்ற வளர்ப்பு நாயும்...

ABOUT THE AUTHOR

...view details