மெயின்புரி:உத்தரபிரதேசத்தில், கடந்த 1998ஆம் ஆண்டு, ஏப்ரல் 17ஆம் தேதி வீரேந்திரா என்பவர் போலீசில் புகார் ஒன்று அளித்தார். அதில், எட்டவா பகுதியைச் சேர்ந்த மன்னன் என்பவர், தனது பாக்கெட்டிலிருந்து 45 ரூபாயை திருடிவிட்டார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கில் மன்னன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 3 மாதங்களுக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பிறகு இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதுதொடர்பான அடுத்தடுத்த விசாரணைக்கு மன்னன் ஆஜராகவில்லை என தெரிகிறது. இதையடுத்து சம்மன்களும், வாரண்ட்டுகளும் அவருக்கு அனுப்பப்பட்டது. அவை மன்னனை சென்றடையவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், தனக்கு எதிராக நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்ததை அறிந்த மன்னன், செப்டம்பர் 28ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவருக்கு நான்கு நாட்கள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து மன்னன் சிறையில் அடைக்கப்பட்டார். 24 நான்கு வருடங்களுக்குப் பிறகு மன்னன் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மனைவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்காததால் கணவன் தூக்கிட்டுத் தற்கொலை