தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆர்டர் செய்தது இன்வெர்டர்...ஆனால் வந்ததோ 5 கிலோ கல்! - இன்வெர்டர்

அனந்தபூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஆன்லைனில் இன்வெர்டர் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் தவறுதலாக அவருக்கு ஐந்து கிலோ எடையிலான கல் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

ஆர்டர் செய்தது இன்வெட்டர், வந்தது 5 கிலோ கல்
ஆர்டர் செய்தது இன்வெட்டர், வந்தது 5 கிலோ கல்

By

Published : Jun 13, 2021, 5:08 PM IST

ஆந்திரப் பிரதேசம், அனந்தபூரைச் சேர்ந்த கைத்தறி தொழிலதிபர் வீட்டு உபயோகத்திற்காக அமேசானில் இன்வெர்டர் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். தொடர்ந்து தன் கைக்கு வந்து சேர்ந்த பார்சலைப் பிரித்து பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் பார்சலில் இன்வெர்டருக்குப் பதிலாக ஐந்து கிலோ எடை கொண்ட கல் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

ஆர்டர் செய்தது இன்வெட்டர், வந்தது 5 கிலோ கல்

இது தொடர்பாக அவர் அமேசான் நிர்வாகத்திடம் ஆன்லைனில் புகார் அளித்தார். இதற்கு பதிலளித்த அமேசான் தரப்பு, இந்த மோசடி குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும், இன்வெர்டருக்கான தொகையை திருப்பி தருவதாகவும் உறுதியளித்துள்ளது.

இதையும் படிங்க: முகக்கவசம் அணியாவிட்டால் சரக்கு கிடையாது' அமைச்சர் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details