போபால்:மத்திய பிரதேச மாநிலம்ரத்லாம் பகுதியை சேர்ந்தவர் சோனு தல்வாடே. ரயில்வே ஊழியரான இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது 2ஆவது மனைவியுடன் ஏற்பட்ட தகராறின்போது அவரை கொலை செய்துள்ளார். அதன்பின் அவர்களது 2 குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு 3 உடல்களையும் வீட்டின் பின்புறம் புதைத்துள்ளார்.
இதையடுத்து இயல்பாக வேலைக்கு சென்று வந்துள்ளார். அவரது மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை என்பதால் சந்தாகமடைந்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து சோனுவிடம் கேட்டுள்ளனர். ஆனால், அவர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பதிலை தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த அவர்கள் ரத்லாம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.