தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மூன்று திருமணம்.. வரதட்சணைக்காக 2 மனைவிகள் கொலை.. பிகாரில் கொடூரம்.. - மனைவியை கொலை செய்த கணவர்

பிகார் மாநிலத்தில் வரதட்சணைகாக மூன்றாவது மனைவியைக் கொலை செய்து, உடலை எரித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Man kills third wife for additional dowry in Bihar
Man kills third wife for additional dowry in Bihar

By

Published : Feb 3, 2023, 10:50 PM IST

பாட்னா:பிகார் மாநிலம் அவுரங்காபாத்தில் வரதட்சணைகாக மூன்றாவது மனைவியைக் கொலை செய்துவிட்டு 2ஆவது மனைவி உடன் தலைமறைவான பஸ்வான் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவுரங்காபாத்தை சேர்ந்த சுபேலால் பஸ்வான் 4 ஆண்டுகளுக்கு முன்பு சந்திரவதி தேவி என்னும் பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார்.

அதன்பின் பஸ்வான் தனது 2ஆவது மனைவியான மம்தா குமாரி உடன் சேர்ந்து கொண்டு தேவியிடம் வரதட்சணை கேட்டு தொடர்ந்து துன்புறுத்திவந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சந்திரவதி தேவி மாயமாகியுள்ளார். இதுகுறித்து அவரது உறவினர்கள் பஸ்வானிடம் கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அதில் சந்திரவதி தேவி கொலை செய்யப்பட்டிருப்பதும், அவரது உடல் எரிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதனிடையே பஸ்வானும் அவரது 2ஆவது மனைவி மம்தா குமாரி இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், "சந்திரவதி தேவியின் உடல் எரிக்கப்பட்டது உறுதி செயப்பட்டுள்ளது. பஸ்வான் தலைமறைவானதால் அவர் மீது சந்தேகம் எழுகிறது. தேவியின் உறவினர்கள் அளித்தப் புகாரின் அடிப்படையில், பஸ்வானை தீவிரமாக தேடிவருகிறோம். உள்ளூர் மக்களிடம் விசாரிக்கையில், பஸ்வான் தனது முதல் மனைவியையும் வரதட்சணைகாக கொலை செய்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

இவருக்கு முதல் மனைவி உடன் 2002ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அதன்பின் அவர் 2003ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணம் தெரியவில்லை. அதேபோல அவர்களுக்கு பிறந்த குழந்தை 2004ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளது. இப்படி பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. பஸ்வானை பிடித்து விசாரிக்கையில் உண்மை தெரியவரும்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:டெல்லி கஞ்சவாலா இளம்பெண் மரண வழக்கு - உள்ளுறுப்பு பரிசோதனை அறிக்கையை வைத்து போலீஸ் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details