சிகாகோ: சிகாகோவிலிருந்து சுமார் 40 மைல் தொலைவில் உள்ள ப்ளைன்ஃபீல்ட் டவுன்ஷிப்பின் இணைக்கப்படாத பகுதியில் உள்ள வீட்டில் பலத்த காயங்களோடு பெண் மற்றும் சிறுவனை அதிகாரிகள் மீட்டனர். என்று வில் கவண்டி ஷெரிப் அலுவலகம் சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
அதன்படி, ‘பலத்த காயமடைந்த சிறுவன் மற்றும் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அதிகாரிகள் அனுமதித்தனர். அப்போது இருவரின் உடலை மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்ததில் சிறுவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
பெண்ணிற்குப் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளதாகவும் முறையான சிகிச்சை அளித்தால் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளது எனவும் மருத்துவர்கள் கூறினர். பின், சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. பரிசோதனையில் சிறுவன் பலமுறை ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளான் என தெரிய வந்தது.
மேலும், தாக்குதலில் பாதிக்கப்பட்ட இருவரும் முஸ்லீம்கள். இந்த இருவரையும் குறிவைத்துத் தாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து வில் கவுண்டி ஷெரிப் அலுவலகத்தின் படி அந்த பெண் 911 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு தன் வீட்டு உரிமையாளர் தன்னை தாக்குவதாகக் கூறி உள்ளார். பின், அவரிடம் தொடர்ந்து சண்டை போட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.