திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் இடுக்கியை சேர்ந்த உரியகுன்னத் ஷிபு என்பவர் நேற்று (ஏப். 24) சமையல் செய்துகொண்டிருக்கும் போது பிரஷர் குக்கர் வெடித்து பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மனைவி கர்ப்பம்... சமையல் செய்த கணவருக்கு நேர்ந்த சோகம்... - இடுக்கியில் குக்கர் வெடித்து ஒருவர் பலி
கேரளாவில் சமையல் செய்யும் போது பிரஷர் குக்கர் வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் மாலை உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். முதல்கட்ட தகவலில், உரியகுன்னத் ஷிபுவின் மனைவி கர்ப்பமாக இருப்பதால், அவரே கடந்த சில நாள்களாக வீட்டு வேலையையும், சமையல் வேலையும் கவனித்துவந்தார். இந்த நிலையில், விபத்து ஏற்பட்டுள்ளது. அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்து ஒருவர் பலி