தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரசு மருத்துவமனையில் ஜஸ் கட்டியில் உடலை வைத்து பாதுகாக்கும் அவலம் - man body in ice cube at pudhucherry

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை பிணவறையில் பிரீசர் பாக்ஸ் பழுதானதால் ஜஸ் கட்டியில் உடலை வைத்து பாதுகாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

man-body-kept-in-ice-cube-at-puducherry-government-hospital
man-body-kept-in-ice-cube-at-puducherry-government-hospital

By

Published : Mar 24, 2022, 12:19 PM IST

Updated : Mar 24, 2022, 1:14 PM IST

புதுச்சேரி மாநில அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு, ஸ்கேன் எந்திரம் கோளாறு, ஆம்புலன்ஸ் பழுது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளதாக புகார்கள் எழுந்துவருகின்றன. இதனால் மருத்துவமனைக்கு வரும் ஏழை, எளிய மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இதனிடையே புதுச்சேரி மாநிலம் ஏனாம் அரசு மருத்துவமனை பிணவறையில் பிரீசர் பாக்ஸ் பழுதாகியது.

இதனால் உடற்கூராய்விற்கு கொண்டுவரப்படும் உடல்கள் ஐஸ் கட்டியின் மீது வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இதனைக்காணும் உறவினர்கள் மருத்துவர்கள், ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் பிணவறையில் ஒருவரது உடல் ஐஸ் கட்டியில் வைக்கப்பட்டிருக்கும்படியான புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க:புதுச்சேரியில் ரூ.7 லட்சம் கொடுத்தால் காவலர் பணி உறுதி.. நாராயணசாமி குற்றச்சாட்டு..

Last Updated : Mar 24, 2022, 1:14 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details