கனடாவின் வடக்கே உள்ள க்ளோண்டிக் தங்க வயல்களில் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் ஒரு அரிய வகை குட்டி மம்மூத்தின் உடலை கண்டெடுத்துள்ளனர். இந்த மம்மூத்திற்கு அந்த ஊர் மக்கள் Tr'ondek Hwech'in First Nation என்று பெயரிட்டனர், அதாவது "பெரிய குழந்தை விலங்கு" என்று பெயர்.
மம்மூத்கள் என்பவை இப்போதுள்ள யானைகளின் மூதாதைகள் என்கின்றனர், வரலாற்று ஆய்வாளர்கள். இந்த வகை யானைகள் பனியுகத்தில் வாழ்ந்தவை. இப்போது உள்ள யானைகள் போல் அல்லாமல் மம்மூத் வகை யானைகள் உருவத்தில் மிகப்பெரியதாகவும் முக நீண்ட தந்தங்களும் உடையவை. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த குட்டி மம்மூத் வகை யானை, பனியுகத்தில் வாழ்ந்தவை. பனிக்காலம் என்பதால் குளிரை தாங்கும் வண்ணம் இதன் உடலில் கம்பளி போன்ற ரோமங்கள் காணப்படுகின்றன.
மம்மூத்களின் உடல் முழுவதும் அடர்த்தியான உரோமங்களால் போர்த்தப்பட்டிருந்த காரணத்தால் இவை கம்பளி யானைகள் என அழைக்கப்பட்டன. இப்போது கண்டுபிடிக்கப்படுள்ள மம்மூத்தானது அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் எல்லையான கனடாவின் யூகோன் பிரதேசத்தில் உள்ள டாசன் நகருக்கு அருகே அகழ்வாராய்ச்சியின்போது குழந்தை மம்மூத்தின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.