மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ்-பாஜக இடையே காரசாரமான மோதல் நிலவிவருகிறது. அதற்கான பரப்புரை தீவிரமடைந்துவரும் நிலையில், இன்று (ஏப் 1) முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நந்திகிராம் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
மம்தாவுக்கு எதிராக அவரது முன்னாள் தளபதியான சுவேந்து அதிகாரி பாஜக சார்பில் களம்காண்கிறார். இன்று நந்திகிராமில் செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் தினத்தன்று ஜெயநதக் பகுதியில் பரப்புரை செய்து தேர்தல் நடத்தை விதிமுறையை மீறிவிட்டார்.