அருணாச்சலப் பிரதேசத்தின் டூட்டிங்கில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (அக் 21) அன்றுபுறப்பட்ட ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர். இதில் உத்திரப் பிரதேச மாநிலம் உதய்பூர் ஹதிபோலைச் சேர்ந்த ராணுவ மேஜர் முஸ்தபா போஹ்ராவும் உயிரிழந்தார்.
சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவ லெப்டினண்டாக இருந்த அவர், பின்னர் ராணுவ கேப்டனாகவும், தற்போது மேஜராகவும் பணியாற்றி வந்தார். வரும் ஏப்ரல் மாதத்தில் பாத்திமா என்ற பெண்ணுடன் முஸ்தபாவுக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில்தான் முஸ்தபாவின் வீர மரணம் நிகழ்ந்துள்ளது.