கொல்கத்தா:தி குளோபல் எனர்ஜி பார்லிமென்டின் (GEP) 13வது கூட்டத் தொடர், கொல்கத்தா ஆளுநர் மாளிகையில் நேற்று (நவ.29) தொடங்கியது. இதில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சிறப்பான சாதனைகளைப் படைத்ததற்காக இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு, மேற்கு வங்காள ஆளுநர் சிவி ஆனந்த போஸ் '2023ஆம் ஆண்டிற்கான கவர்னர் சிறப்பு விருது' வழங்கினார்.
பின், கூட்டத்தொடரில் சந்திரயான் 3 வெற்றி குறித்து பேசிய சோம்நாத், இந்த விருது ஒன்றாக செயல்படுவதற்கான பலத்தை தருகிறது எனக் கூறி நன்றி தெரிவித்தார். பின், ஆளுநர் மாளிகையில் உள்ள ஸ்க்ரைப்சிடம் உரையாடுகையில், “எதிர்காலத்தில் இஸ்ரோவிற்கு பல முக்கியமான இலக்குகள் உள்ளது. ஆனால் முதன்மையான இலக்கு, ககன்யான் திட்டம்தான். சந்திரனுக்கு மனிதனை அனுப்பி, பாதுகாப்பாக பூமிக்குக் கொண்டு வருவதே எங்கள் குறிக்கோள்” என தெரிவித்தார்.
கூட்டத் தொடருக்குப் பின், இஸ்ரோவின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சோம்நாத் , “வெற்றிக்குப் பின்னால் உள்ள கடுமையான உழைப்பை சந்திரயான் 3 வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இன்னும் சில காலங்களில் ஜி20 என்கிற செயற்கைக்கோள் ஏவப்படவுள்ளது” என்றார். ஜி20 செயற்கைக்கோள் குறித்து, G20 அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார் என்பது குறிப்பிடதக்கது.