தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜகவினரே... கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள்... எம்.பி. மஹுவா மொய்த்ரா... - பாஜவை சாடிய எம்பி மஹுவா மொய்த்ரா

பாஜகவினரே, கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள் மக்களவையில் சந்திக்கலாம் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா ட்விட்டர் வாயிலாக சாவால் விட்டுள்ளார்.

Mahua Moitra
Mahua Moitra

By

Published : Feb 3, 2022, 8:40 PM IST

டெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா அடிக்கடி சமூக ஊடகங்களில் சர்ச்சையை கிளப்பும் விதமாக கருத்து பதிவிடுவது வழக்கம். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகாவிற்கு எதிராக கருத்துகளை பதிவிட்டுவருவார். கடந்த பட்ஜெட் கூட்டத்தொடர் உரையில் மொய்த்ரா "அதிகார மமதை, மதவெறி, பொய் உள்ளிட்டவையில் மறைந்திருக்கும் கோழையான பாஜக அரசு தனது கோழைத்தனத்தை வெற்றியாக கருதி வருகிறது என்று விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் மொய்த்ரா, "மக்களவையில் இன்று மாலை குடியரசுத் தலைவர் உரை மீதான தீர்மானத்தின் போது பேசுகிறேன். பாஜகவினரே உங்களுடைய படையைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். கூடவே கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள்" என்று பதிவிட்டுள்ளார். இது பாஜகவினர் மத்தியில் பெரும் சர்ச்சயை கிளப்பியுள்ளது.

நேற்று பட்ஜெட் கூட்டத்தொடரின் குடியரசுத்தலைவர் உரைக்கு வணக்கம் செலுத்தும் விவாதத்தில் காங்கிரஸ் ராகுல் காந்தி, ஒன்றிய அரசை கடுமையாக சாடினார். ஏழை, பணக்காரர்களுக்கு என தனித்தனி இந்தியாவை மோடி அரசு உருவாக்கியிருப்பதாக மோடி அரசை குற்றம்சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'ஏழை, பணக்காரர்களுக்கு தனித்தனி இந்தியா'; மோடி அரசை வெளுத்து வாங்கிய ராகுல்!

ABOUT THE AUTHOR

...view details