தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆம்ஃபிபியஸ் வாகனங்கள் உருவாக்குவதில் மேம்பட்டுள்ளோம் - மகேந்திரா - தார்

பொலிரோ வாகனம் வெள்ளத்தை கடப்பதை காணொலியாக பதிவிட்டதையடுத்து, தற்போது ஆற்றை கடக்கும் மகேந்திரா தார் கார் குறித்த காணொலியை பதிவிட்டு, ஆம்ஃபிபியஸ் கார் உருவாக்குவதில் மேம்பட்டுள்ளோம் என மகேந்திரா தெரிவித்துள்ளார்.

மகேந்திரா
மகேந்திரா

By

Published : Sep 19, 2021, 6:26 AM IST

Updated : Sep 19, 2021, 7:56 AM IST

இந்தியாவின் மிகப்பெரும் தொழிலதிபர்களுள் ஒருவரான ஆனந்த் மகேந்திரா சமூக வலைதல பக்கங்களில் ஆக்ட்டிவ்வாக செயல்பட்டு வருகிறார். அவ்வப்போது தன்னை ஈர்க்கும் காணொலிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாகவும் கொண்டுள்ளார்.

இவர் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி வெள்ள நீரில் மிதந்து செல்லும் மகேந்திரா பொலிரோ கார் காணொலியை பதிவிட்டு, வெள்ளத்திலும் பொலிரோ கார் ஓடுவது குறித்து ஆச்சர்யப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி, ஆற்றைக் கடக்கும் மகேந்திரா கார் குறித்த காணொலி ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

அதில் ," குஜராத் வெள்ள நீரில் செல்லும் பொலிரோ கார் குறித்த பதிவினை பலரும் யூ ட்யூப் பக்கங்களில் பதிவிட்டதை காண நேரிட்டது. தற்போது புதிய ஆம்ஃபிபியஸ் (நீர் மற்றும் நிலம்) கார்களை உருவாக்குவதில் சிறப்புற்றிருக்கிறோம்” என தனது நிறுவனத்தின் இருவேறு கார்களை ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:நான் அவமானப்படுத்தப்பட்டேன்- பதவியை ராஜினமா செய்த அமிரிந்தர் சிங் வேதனை

Last Updated : Sep 19, 2021, 7:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details