தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா பாதித்த யுபிஎஸ்சி தேர்வர்... நேர்காணல் தேதியை மாற்றி அறிவித்த தேர்வாணையம்... போராடிக் காப்பாற்றிய மருத்துவக் குழு! - மகாராஷ்டிரா

தேவானந்தின் நுரையீரல் 80 விழுக்காடு சேதமடைந்த நிலையில், அவரது நுரையீரலை மாற்ற வேண்டும் எனக் கருதப்பட்ட நிலையிலும், அந்தத் தேவையின்றி மருத்துவக்குழு அவரை வெற்றிகரமாக குணப்படுத்தியுள்ளது. மேலும், மே மாதம் தேவானந்த் கலந்துகொள்ளவிருந்த யுபிஎஸ்சி நேர்காணல் தேதியும் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட யுபிஎஸ்சி தேர்வர்
கரோனாவால் பாதிக்கப்பட்ட யுபிஎஸ்சி தேர்வர்

By

Published : Sep 9, 2021, 2:37 PM IST

மகாராஷ்டிரா மாநிலம், அகோலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவானந்த் தெலகோட் (26). அகில இந்திய யுபிஎஸ்சி பொதுத்தேர்வில் இவர் முதல்நிலைத் தேர்வான பிரிலிம்ஸ், அடுத்தகட்ட மெய்ன் தேர்வு என இரண்டிலும் வெற்றிபெற்று இறுதிக்கட்டத் தேர்வான நேர்காணலுக்கு தயாராகி வந்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக அவருக்கு அச்சமயத்தில் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

முதலில் டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் சிகிச்சைப் பெற்று வந்த தேவானந்தின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த நிலையில், ஹைதராபாத்தின் கிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு அங்கு எக்மோ சிகிச்சைக் கருவிகள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை தொடங்கப்பட்டது.

தேவானந்த்

ஆனால் அவரது நுரையீரல் தொடர்ந்து மோசமடைந்த நிலையில், வென்டிலேட்டரும் அவருக்கு பலனளிக்கவில்லை. தொடர்ந்து ஹைதராபாத் கிம்ஸ் மருத்துவமனையில் இருதய மற்றும் நுரையீரல் மாற்று மையத்தின் உதவியுடன், மருத்துவர் சந்தீப் அத்தவர் தலைமையிலான மருத்துவக் குழுவின் இடைவிடாத முயற்சி காரணமாக தேவானந்த் படிப்படியாக மீளத் தொடங்கினார்.

அதே நேரத்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக படுக்கையில் இருந்ததன் விளைவாக, தேவானந்தின் தசைகள் மிக மோசமாக சேதமடைந்தன. இதனையடுத்து நுரையீரல் பிரச்சனையிலிருந்து மீண்ட பிறகு, அவருக்கு பிசியோதெரபி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, படிப்படியாக அவர் எந்த உதவியும் தேவையில்லாமல் நடக்கத் தொடங்கிய தேவானந்த் தற்போது முழுமையாக நலம்பெற்றுள்ளார்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட யுபிஎஸ்சி தேர்வர்

தேவானந்தின் நுரையீரல் கிட்டத்தட்ட 80 விழுக்காடு சேதமடைந்த நிலையில், ஒரு கட்டத்தில் அவரது நுரையீரலை மாற்ற வேண்டும் எனக் கருதப்பட்ட நிலையிலும், டாக்டர் சந்தீப் அட்டவார் தலைமையிலான மருத்துவக் குழு, அந்தத் தேவையின்றி அவரை வெற்றிகரமாக குணப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தேவானந்தும் அவரது குடும்பத்தினரும் சிகிச்சையளித்த மருத்துவர்கள், ஊழியர்கள் தங்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர். மேலும், மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தியாக மே 5ஆம் தேதி திட்டமிடப்பட்ட தேவானந்தின் நேர்காணலை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு மாற்றி யுபிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:நம்பிக்கை அதுதானே எல்லாம்: 70% நுரையீரல் தொற்றிலிருந்து மீண்ட முதியவர்!

ABOUT THE AUTHOR

...view details