தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாநிலத்திற்கு 1.5 கோடி டோஸ் கோவிஷீல்ட் ரெடி : அமைச்சர் டோபே - மகாராஷ்டிரா கொரோனா

சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் அடார் பூனவல்லா, மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மே மாதம் 20ஆம் தேதிக்கு பிறகு 1.5 கோடி டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தருவதாக உறுதியளித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோபே தெரிவித்துள்ளார்.

Covishield doses to Maharashtra
Covishield doses to Maharashtra

By

Published : May 13, 2021, 11:56 AM IST

மும்பை (மகாராஷ்டிரா): சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர், மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் மே 20ஆம் தேதிக்கு மேல் 1.5 கோடி டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

கோவிட்-19 தொற்று பரவல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோபே, 'மே 20ஆம் தேதிக்கு மேல் 1.5 கோடி டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி மாநிலத்திற்கு கிடைக்கும். அதையடுத்து, 18 - 44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும்.

தற்போது, தடுப்பூசி செலுத்திக் கொள்ள 18 - 44 வயதுடையவர்கள் பதிவு செய்ய இயலாது. தற்காலிகமாக அப்பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி தட்டுபாடே இதற்குகாரணம். புதிய டோஸ்கள் கிடைத்தவுடன், 18 - 44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும்.

மாநிலத்தில் புதிதாக 46,781 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 58,805 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். 816 பேர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details