தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Omicron Outbreak: மகாராஷ்டிராவில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள்

மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்துள்ளதால், இரவு ஊரடங்குடன் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

new-covid-guidelines
new-covid-guidelines

By

Published : Dec 24, 2021, 9:28 PM IST

மும்பை:தென் ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான், 100 நாடுகளுக்கும் மேல் பரவிவிட்டது. இந்தியாவில் கடந்த வாரத்தில் 30 பேருக்கு மட்டுமே உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த வாரத்தில் 350 பேருக்கு உறுதியாகி உள்ளது. மகாராஷ்டிரா, தெலங்கானா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

குறிப்பாக மகாராஷ்டிராவில் தொற்று எண்ணிக்கை 100ஐ எட்டியுள்ளது. இதனால், மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. ஏற்கனவே உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவிட்டது.

இந்த நிலையில் மகாராஷ்டிராவில் நள்ளிரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்குவர உள்ளது. அதுமட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் மீண்டும் ஊரடங்கு அச்சத்தில் உள்ளனர்.

புதிய கட்டுப்பாடுகள்

  • மாநிலம் முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு
  • இரவு நேர ஊரடங்கின் போது 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை
  • திருமண மண்டபங்களில் 100 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்
  • திறந்தவெளி திருமணங்களில் 250 பேருக்கு அனுமதி
  • சமூக, அரசியல், மத நிகழ்வுகளில் 100 பேருக்கு அனுமதி. திறந்தவெளியில் 250 பேருக்கு அனுமதி
  • உணவகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், ஸ்பாக்கள், திரையரங்குகளில், வணிக வளாகங்களில் 50 விழுக்காடு மக்களுக்கு மட்டுமே அனுமதி

இதையும் படிங்க:Omicron Outbreak: இரவு ஊரடங்கு எந்தெந்த மாநிலங்களுக்கு வாய்ப்பு?

ABOUT THE AUTHOR

...view details