உத்தரப்பிரதேசம்:மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன், அதே பகுதியைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று, சிறுமியை கத்தி முனையில் வழிமறித்த சிறுவன், அவளது நடு நெற்றியில் திருமணமான பெண்களை குறிக்கும் விதமாக சிவப்பு நிற வர்ணத்தை பூசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்தப் புகாரில், சிறுவனை பிடித்து சிறார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.