தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தெலங்கானாவின் பாரம்பரிய மகாகாளி அம்மனின் போனாலு திருவிழா: பக்தர்கள் காத்திருந்து வழிபாடு

தெலுங்கானா மாநிலத்தின் பாரம்பரிய விழாவான உஜ்ஜயினி மகாகாளி அம்மனின் “போனாலு திருவிழா” செகந்திராபாத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது.

தொலுங்கானாவின் பாரம்பரிய போனலு திருவிழா
தொலுங்கானாவின் பாரம்பரிய போனலு திருவிழா

By

Published : Jul 9, 2023, 5:56 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்தின் பாரம்பரியமான விழாவான மகாகாளி போனாலு திருவிழா மிகுந்த ஆரவாரத்துடனும் உற்சாகத்துடனும் இன்று(ஜூலை 9)துவங்கியுள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு செகந்திராபாத் முழுவதும் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்த திருவிழா கடந்த மாதம் கிராம தேவதைகளாக கருதப்படும் அம்மன்களுக்கு பூஜைகள் மற்றும் அபிஷேகங்களுடன் தொடங்கப்பட்ட நிலையில், இன்று உஜ்ஜயினி மகாகாளி அம்மன் மற்றும் செகந்திராபாத் மகாகாளி கோயிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்த திருவிழா கிராம தெய்வங்களை முன்னிறுத்திய திருவிழா என்பதால், பெண்களின் பங்கு அதிகளவில் காணப்படுகிறது. இந்த திருவிழா மாநிலத்தின் தனித்துவம் வாய்ந்த பாரம்பரியத்தை பூஜைகள் மற்றும் அபிஷேகங்களால் நிறைவூட்டுகிறது. உஜ்ஜயினி மகாகாளி அம்மன் திருவிழா வெகு விமரிசையாக தொடங்கப்பட்ட நிலையில், அதிகாலையிலேயே அம்மனுக்கு குங்குமம், மஞ்சள், புடவைகள், மலர்கள் என அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. முதல் பூஜைக்காக பல லட்சம் மக்களுக்கும் மேல், காலை 3 மணியிலிருந்து காத்திருந்தனர்.

இதையும் படிங்க:Tiruchendur: திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

இந்நிலையில், அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், புடவை மற்றும் மலர் என அனைத்தும் சாற்றப்பட்டு குடும்பத்தோடு சிறப்பு வழிபாடு செய்து பொது வழிபாட்டை துவக்கி வைத்தார், தெலங்கானா மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் ஸ்ரீனிவாஸ் யாதவ்.

இதுகுறித்து பேசிய அவர், '' மகாகாளி அம்மனுக்கு ஆஷாடம் (ஜூன்-ஜூலை)மாதத்தில் காலம்காலமாக நடைபெற்று வரும் போனாலு பூஜைகள் இந்தாண்டும் வெகு விமரிசையாக, பல்வேறு கொண்டாட்டங்களுடன் ஆரம்பித்துள்ளது. முதலில் கோல்கொண்டா ஜகதாம்பிகை அம்மனுக்கு தொடங்கப்படும் இந்த திருவிழா அடுத்தடுத்து ஹைதராபாத் நகரங்களில் அமைந்துள்ள தொன்மைவாய்ந்த மகாகாளி கோயில்களில் சிறப்பு அலங்காரங்களுடன் கொண்டாப்படுகிறது.

அம்மனின் அருளால் இந்தாண்டும் விவசாயம், தொழில், மற்றும் மக்கள் நோயின்றி சந்தோஷமாக வாழ அம்மன் அருள் நிறைந்திருக்கும். வரும் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் பிரசித்திபெற்ற மகாகாளி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகளுடன் திருவிழா களைகட்டவுள்ளது. மேலும் இந்த சிறப்புமிக்க போனாலு திருவிழாவை மாநிலத்தின் திருவிழாவாக அறிவிக்க வேண்டும்'' என்று பூஜைகள் முடிந்தபின் தெரிவித்துள்ளார்.

திருவிழாவின் போது, மக்களின் பாதுகாப்புக் கருதி அரசு சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தெலங்கானா மாநிலத்தின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமைந்த இந்த திருவிழாவிற்கு, பல கோடி மக்கள் வருகை தந்து தரிசனம் செய்கின்றனர். இந்த திருவிழாவின் பாரம்பரியத்தை உணர்ந்து வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து சிறப்பிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:மாஞ்சோலையில் சூறாவளியுடன் கூடிய மழை; முறிந்து விழுந்த செல்போன் டவர்; தொலைத் தொடர்பின்றி மக்கள் அவதி!

ABOUT THE AUTHOR

...view details