நாக்பூர்:நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் பாம்ரகட் தாலுகாவில் உள்ள பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த அருண் லால்சு மட்டாமி மற்றும் அமராவதி மாவட்டம் மக்லா பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த சப்னா இருவரும் நீட் தேர்வில் வெற்றிபெற்றுள்ளனர். இதில் அருண் மடியா கோண்த் பழங்குடியினத்தையும், சப்னா மேல்காத் பழங்குடியினத்தையும் சேர்ந்தவர்கள். இருவரும் மருத்துவப்படிப்பில் கொண்டிருந்த ஆர்வம் காரணமாக தங்களது கிராமங்களைவிட்டு வெளியே தங்கி படித்துவந்த நிலையில், இந்தாண்டு நீட் தேர்வில் வெற்றிபெற்றுள்ளனர்.
நீட் தேர்வில் வெற்றிபெற்ற 4 பழங்குடியின மாணவர்கள்
மகாராஷ்டிராவின் பழங்குடியின கிராமங்களை சேர்ந்த நான்கு மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதுகுறித்து அருண் லால்சு மட்டாமி கூறுகையில், நான் அரசு பள்ளியில் படித்தேன். மருத்துவராக வேண்டும் என்பது என்னுடைய கனவு. நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர பணமில்லாத சூழலில் எனது ஆசிரியர்கள் எனக்கு பணம் கொடுத்து உதவினர். அவர்களுக்கு நன்றி என்று தெரிவித்தார். சப்னா, அருண் போன்ற பழங்குடியின மாணவர்கள் மட்டுமல்லாமல் மகாராஷ்டிராவில் சச்சின் அர்கி, ராகேஷ் போடலி ஆகிய பழங்குடியின மாணவர்களும் இந்தாண்டு நீட் தேர்வில் வெற்றிபெற்றுள்ளனர்.
இதையும் படிங்க:நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை முயற்சி... உயிரை காத்த ஃபேஸ்புக் அலெர்ட்...