மும்பை:மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி வனப்பகுதிகளில்கடந்த 10 மாதங்களில் 13 பேரை கொன்ற புலி ஒரு வழியாக வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது. ’சிடி-1’ என்று பெயரிடப்பட்ட இந்தப் புலி கட்சிரோலியின்வட்சா வனப்பகுதிகளில் சுற்றி திரிந்து வந்தது. இதனால் அந்த வனப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகினர். அந்த புலி கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து 13 பேரைக் கொன்றது.
புனேவில் 13 பேரை கொன்ற புலி சிக்கியது
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் 13 பேரைக் கொன்ற புலியை வனத்துறையினர் பிடித்தனர்.
பூனாவில் 13 பேரைக் கொன்ற புலியை வனத்துறையினர் லாவகமாகப் பிடித்தனர்..!
குறிப்பாக வட்சாவில் 6 பேரையும், பாந்த்ராவில் 4 பேரையும், பிரம்மபுரியில் 3 பேரையும் கொன்றது. இதனிடையே வனத்துறையினர் அந்தப் புலியை பிடிக்க பல்வேறு முயற்சிகலில் ஈடுபட்டுவந்தனர். இந்த நிலையில் தடோபா புலிகள் மீட்பு குழு உள்பட வனத்துறை அலுவலர்கள் அக்.13ஆம் தேதி அந்தப் புலியை பிடித்தனர். அதன்பின் கோர்வாடா மீட்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: பார்ட்டியில் சக தோழியை கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்த 3 பேர் கைது