புதுடெல்லி: 19 கிலோ எடை கொண்ட வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை இன்று (மே1) ரூ.102.50 உயர்த்தப்பட்டுள்ளது. 5 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் விலை இப்போது ரூ.655 ஆக உள்ளது.
முன்னதாக ஏப்ரல் 1ஆம் தேதி 19 கிலோ கமர்ஷியல் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.250 உயர்த்தப்பட்டது. இதன் மூலம், 19 கிலோ வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.2,355.50 ஆக உள்ளது. வர்த்தக ரீதியான எல்பிஜி விலை மார்ச் 1ஆம் தேதி ரூ.105 உயர்த்தப்பட்டது.