ராய்கர்:சத்தீஸ்கர் மாநிலத்தில் சென்ற மார்ச் 15 அன்று ராய்கர் நீதிமன்றம் 10 நபர்களுக்கு ஆக்கிரமிப்பு வழக்கிற்காக சம்மன் அனுப்பியுள்ளது. இதில் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட சிவ ஆலயத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ராய்கர் தாலுகா அலுவலகத்தின் தாசில்தார் நிலம் மற்றும் குளம் உடைமை தொடர்பாக 10 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
வார்டு எண் 25இல் வசிக்கும் சுதா ராஜ்வாடே என்பவர், பிலாஸ்பூர் உயர் நீதிமன்றத்தில், சிவன் கோயில் உட்பட 16 பேர் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக குற்றம்சாட்டி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரிக்குமாறு மாநில அரசு மற்றும் தாசில்தார் அலுவலகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக நீதிமன்றம் 10 பேருக்கு சம்மன் அனுப்பியிருந்தது.