டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள யங் இந்தியா அலுவலகத்துக்கு நேற்று (ஆக 3) சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களைவையில் கோரிக்கை வைத்தார். இதற்கு அவைத் தலைவர் மறுப்பு தெரிவிக்கவே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
நேஷனல் ஹெரால்டு: மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு - நாடாளுமன்ற கூட்டத்தொடர் 2022
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
Etv Bharat
இதனால் மாநிலங்களவை 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே 11 மணியளவில் தொடங்கிய மக்களவையிலும் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா உறுப்பினர்களிடம் தங்களது இருக்கைக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் ஓம் பிர்லா பிற்பகல் 2 மணி வரை அவையை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க:உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் பெயர் பரிந்துரை
Last Updated : Aug 4, 2022, 2:04 PM IST