இந்தியா முழுவதும் கரோனா 2ஆம் அலை ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டுகிறது.
கேரளாவில் 8 நாளுக்கு முழு ஊரடங்கு! - kerala lockdown
திருவனந்தபுரம்: கரோனா பரவலை தடுத்திட, மே 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளா
இதனை கருத்தில் கொண்டு, வைரஸ் பரவலை தடுத்திட மே 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.