தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மங்களூரு குண்டு வெடிப்பு: ஐஆர்சி அமைப்பு பொறுப்பேற்பு

மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு, ஐஆர்சி என்ற இஸ்லாமிய அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 24, 2022, 8:13 PM IST

கர்நாடகா(பெங்களூரு):மங்களூருவில் கடந்த நவ.19 ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இஸ்லாமிய எதிர்ப்பு கவுன்சில் - ஐஆர்சி என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அத்தோடு, அந்த அமைப்பின் 'முஜாஹித் சகோதரர் முகமது ஷாரிக்' என்ற ஒருவர் தஷிணா கன்னடா மாவட்டம் கத்ரியில் உள்ள 'மஞ்சுநாத்' கோவிலை தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த அமைப்பு குறித்த உண்மைத்தன்மையை தீவிரமாக விசாரணை செய்வதாக, கூடுதல் காவல்துறை இயக்குநர் சட்டம் மற்றும் ஒழுங்கு அலோக் குமார் தெரிவித்தார்.

இதுகுறித்த அந்த அமைப்பினர் வெளியிட்ட கடிதத்தில், "நாங்கள் இஸ்லாமிய எதிர்ப்பு கவுன்சில் (IRC) செய்தியை தெரிவிக்க விரும்புகிறோம்; எங்கள் முஜாஹித் சகோதரர்களில் ஒருவரான முகமது ஷாரிக் மங்களூருவில் உள்ள காவி பயங்கரவாதிகளின் கோட்டையான தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள கத்ரியில் 'மஞ்சுநாத்' கோவிலை தாக்க முயன்றார் என்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்த முயற்சியில் நாங்கள் எங்களின் இலக்கை அடையாவிட்டாலும், இதை வெற்றியாகவே கருதுகிறோம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மங்களூரு ஆட்டோ வெடிப்பு சம்பவம்; முகமது ஷாரிக் தங்கியிருந்த விடுதி மூடல்

ABOUT THE AUTHOR

...view details