தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம் - ஆளுநர் தமிழிசை - சிறப்பு அஞ்சல் உறைகள்

புதுச்சேரி: புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம் அதன்மூலம் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிப்போம் என ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

governor
governor

By

Published : Sep 28, 2021, 4:33 PM IST

புதுச்சேரி தலைமை அஞ்சல் நிலையம் சார்பில் சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியீட்டு நிகழ்ச்சி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று (செப்.28) நடைபெற்றது. இதில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு சிறப்பு அஞ்சல் உறைகனை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், சென்னை மண்டல அஞ்சல்துறை இயக்குநர் சோமசுந்தரம், சென்னை நகர அஞ்சல்துறை தலைமை அலுவலர் வீணா ஸ்ரீநிவாஸ், ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய விருது பெற்ற தெரக்கோட்டா கலைஞர் முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆளுநர் தமிழிசை

அஞ்சல் உறைகளை வெளியிட்டுப் பேசிய தமிழிசை, "புவிசார் குறியீடு என்பது அந்தந்த பகுதிகளில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு குறியீடு கொடுத்து அவற்றை பிரபலப்படுத்துவது.

புவிசார் குறியீடு பெற்றுள்ள, புதுச்சேரியில் தயாரிக்கப்படும் சுடுமண் சிற்பங்கள் மற்றும் காகித கூழ் பொருட்களுக்கு சிறப்பு அஞ்சல் உறைகளை வெளியிடுவதற்காக புதுச்சேரி தலைமை அஞ்சலகத்தைப் பாராட்டுகிறேன்.

கடிதம் எழுதும் பழக்கம் மிகவும் குறைந்து வருகிறது. கடிதம் மிகப்பெரிய உறவுகளை கட்டமைத்து இருக்கிறது. வரலாறு படைத்திருக்கிறது. பல முன்னேற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆளுநர் தமிழிசை

நமக்கு வேண்டியவர்களிடம் மனம் விட்டு பேச கடிதம் எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சுதந்திரப் போராட்ட காலத்தில் கடிதங்கள் மிகப்பெரிய பங்காற்றி இருக்கின்றன.

வரலாறுகளையும் பண்பாட்டு பாரம்பரியத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும். கரோனா பெருந்தொற்று, கை-கால்கள் கழுவுவது போன்ற நம் முன்னோர்களின் சில பழக்க-வழக்கங்களை நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது. புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். அதன்மூலம் கலைஞர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிப்போம்" என்றார்.

இதையும் படிங்க: தமிழிசை மீதான அவதூறு வழக்கு: ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details