டெல்லி: நெப்லைசர்ஸ், ரத்த அழுத்த சோதனைக் கருவி, டிஜிட்டல் தெர்மோமீட்டர், குளுக்கோ மீட்டர் போன்ற மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், தயாரிக்கவும் இனி நிறுவனங்கள், மத்திய அல்லது மாநில உரிமம் ஆணையத்திடமிருந்து அதற்கான உரிமத்தை பெற வேண்டும் என இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டுப்பாடு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்ய புதிய கட்டுப்பாடு - Drugs Standard Control Organisation
மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்யவும், தயாரிக்கவும் மத்திய உரிமம் ஆணையம் அல்லது மாநில உரிமம் ஆணையத்திடமிருந்து உரிமம் பெற பெற வேண்டும் என இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
Drugs Standard Control Organisation
இதனை உடனே பின்பற்றுவதில் சில சிக்கல்கள் உள்ளதாகவும், இது தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு காண வேண்டும் என்பதாலும், இந்த அறிவிப்பை மேலும் சில மாதங்களுக்கு பின் அமல்படுத்த வேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:தனது படைப்புகளுக்கான உரிமைகளை வாசகருக்கு வழங்கிய எழுத்தாளர்