ஹாங்சோ (சீனா): ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியை ருதுராஜ் கெய்க்வாட் தலைமை தாங்குகிறார். நாளை (அக்.03) இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி காலிறுதி ஆட்டத்தில் விளையாட உள்ளது. இந்த நிலைய அணியின் கேப்டன் கெய்க்வாட் கூறும் போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம் பல முக்கிய விபரங்களைக் கற்றுக்கொண்டேன். ஆனால் எனது தனித்துவத்துடன் அணியைத் தலைமை தாங்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியைத் தலைமை தாங்கும் கெய்க்வாட் செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறும் போது, ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் போது மகேந்திர சிங் தோனியிடம் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். ஆனால் தற்போது எனது தனித்துவத்துடன் அணியை வழிநடத்த விரும்புகிறேன். மேலும் வீரர்களுக்கு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தச் சுதந்திரம் அளிக்க விரும்புவதாகவும் மகேந்திர சிங் தோனி அணியை வழிநடத்தும் முறையும் நான் அணியை வழிநடத்தும் முறையும் வித்தியாசமானது எனத் தெரிவித்தார்.
மேலும் நான் நானாக இருக்க வேண்டும். அணிக்காக விளையாடும் ஒவ்வொரு வரும் அவர்களுக்கான திறமைகளை வெளிப்படுத்தவும், சூழ்நிலைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான சுதந்திரத்தை அணி வீரர்களுக்கு வழங்க விரும்புகிறேன். நான் விரும்பும் வழியில் வழிநடத்த விரும்புகிறேன் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:Cricket World Cup 2023: இலங்கை அணியில் கவனிக்க வேண்டிய ஐந்து முக்கிய வீரர்கள்!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற்றுத் தங்கப் பதக்கத்தை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியைப் போலத் தங்கப் பதக்கத்தை வெல்ல ஆர்வமாக இருக்கிறோம். இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியில் உள்ள அனைவருக்கும் தங்கம் வெல்ல வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. உலகக் கோப்பை, ஐபிஎல் மற்றும் உள்நாட்டுப் போட்டிகள் கிரிக்கெட்டில் உள்ளது. ஆனால் தற்போது இங்கு வந்துள்ள வீரர்கள் எந்த மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்ளுவார்கள் என்று தெரியும் எனத் தெரிவித்தார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய ஆண்கள் கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் மட்டும் அல்லாமல் நமது நாட்டிற்காக விளையாடும் பேட்மிண்டன், டென்னிஸ் அல்லது ஹாக்கி போன்ற பல்வேறு விளையாட்டுகளைப் பார்க்கச் சிறந்த வாயப்பாக அமைந்துள்ளது. இந்திய அணி வெற்றி பெரும் போதும் அது மிக மகிழ்ச்சியைத் தந்தது. இங்கு அனைத்து விளையாட்டுப் போட்டிகளுக்கும் சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. மேலும் நேபாளம் கிரிக்கெட் அணி மங்கோலியாவிற்கு எதிரான சாதனைகள் படைத்தது போன்றவை என கெய்க்வாட் கூறினார்.
சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் வி.வி.எஸ்.லக்ஷ்மன் கூறும் போது, சீனாவில் கிரிக்கெட் விளையாடுவது சிறந்த அனுபவமாக இருக்கக் கூடும். இங்கு அனைத்து வித்தியாசமான முறையாக உள்ளது. இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்களுக்குச் சிறந்து வாய்ப்பு மேலும் பெருமைகொள்ளக் கூடிய நிகழ்வு இந்த கிரிக்கெட் போட்டியைக் காண ஆவலுடன் உள்ளேன் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:Cricket World Cup 2023: கவனிக்கப்பட வேண்டிய பங்களாதேஷ் வீரர்கள்!