திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உயர்கல்வி முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் ஆளுநர் ஆரிப் கான் செயல்படுவதாக குற்றம்சாட்டி அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்குடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் எல்டிஎப் கூட்டணி சார்பாக ஒரு லட்சம் தொண்டர்களுடன் இன்று (நவம்பர் 15) பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணி ஆளுநர் மாளிகை வழியாக நடத்தப்பட்டது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், "கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் ‘இந்து ராஷ்டிரா’ சித்தாந்தத்தை செயல்படுத்த முயற்சிக்கிறார். அதை கேரளா எதிர்க்கும். அவர் ஜனநாயக விரோதமாக செயல்படுகிறார். ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுத்து வருகிறார்.