ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் மறைந்த சையது அலி ஷா ஜிலானி. தெஹ்ரிக் இ ஹரியாத் என்ற அரசியல் கட்சியையும் நடத்தி வந்தார். இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக பங்கரவாதம் மற்றும் தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக இவர் தொடர்புடைய ஜமாதி இ இஸ்லாமி அமைப்பை மத்திய அரசு தடை செய்தது.
இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், 13 ஆண்டுகள் வீட்டுச் சிறையில் வைக்க ஜம்மு அரசு உத்தரவிட்டது. உடல் நலக் கோளாறு, நீண்ட கால நோய்கள் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உயிரிழந்தார். இவர் தொடர்பான வழக்குகளை ஜம்மு காஷ்மீரின், மாநில புலனாய்வு அமைப்பு விசாரித்து வந்தது.