தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

50 ஆண்டுகால அரசியல் உறவு... கொள்கை... அன்பின் நீட்சி... லாலு குணமடைய நிதிஷ் வாழ்த்து! - லாலு பிரசாத் யாதவ்

பாட்னா: லாலு பிரசாத் உடல்நலக்குறைவு காரணமாக, டெல்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் குணமடைய பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லாலு
லாலு

By

Published : Jan 24, 2021, 7:30 PM IST

பிகார் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவருமான லாலு பிரசாத்தின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில், அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாட்னாவில் ஐக்கிய ஜனதா தள கட்சி அலுவலகத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த நிதிஷ், "லாலு விரைவில் குணமடைவதே என் விருப்பம். நாங்கள் அரசியலில் எதிரிகளாக இருக்கலாம். ஆனால், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் நான் அது குறித்து விசாரித்து தெரிந்து கொள்வேன். இப்போதெல்லாம் பத்திரிகைகளில்தான் அவர் உடல்நிலை குறித்து தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது" என்றார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கார்பூரி தாக்கூரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நிதிஷ் மரியாதை செலுத்த சென்றிருந்தார்.

லாலுவின் உடல்நலம் குறித்து அவரைப் பார்த்து கொள்பவரிடம் (மகன் தேஜஸ்வி யாதவ்) தொலைபேசி மூலம் விசாரித்தபோது, அவர் தன்னை அவமதித்ததாக நிதிஷ் குமார் கூறியது சர்ச்சையைக் கிளப்பியது. முன்னதாக மாட்டுத்தீவன ஊழல் வழக்கின் குற்றவாளியான லாலு ராஞ்சி சிறையில் தண்டனை அனுபவித்துவருகிறார்.

உடல்நலக்குறைவு காரணமாக ஆர்ஐஎம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கடந்த 50 ஆண்டு காலமாக, எதிரெதிர் துருவங்களாக திகழும் நிதிஷ் குமாரும், லாலு பிரசாத் யாதவும் 2015ஆம் ஆண்டு மோடி எதிர்ப்பில் ஒன்றிணைந்தனர். இருப்பினும், ஊழல் குற்றச்சாட்டை மீண்டும் முன்வைத்து பாஜகவுடன் நிதிஷ் கைகோர்த்தார்.

ABOUT THE AUTHOR

...view details