உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்ட ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் மகன் உள்ளிட்ட மூவரின் பிணை மனு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்து மாவட்ட நீதிபதி முகேஷ் மிஸ்ரா, பிணை மனு மீதான விசாரணையை நவம்பர் 15ஆம் தேதி ஒத்திவைத்தார். இதையடுத்து அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் சிறைவாசம் 15ஆம் தேதி தொடர்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள் உள்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரை ஏற்றி கொலை செய்ததாக, குற்றஞ்சாட்டப்பட்டு தொடர் அழுத்தத்திற்குப் பின் அவர் கைதாகியுள்ளார்.
இதையும் படிங்க:பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.10 விலை குறைப்பு - மத்திய அரசு அதிரடி