ஆந்திராவில் உள்ள குர்னூல் விமான நிலையத்தை மேம்படுத்த ஆந்திர மாநில அரசு 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இந்த மேம்பாட்டு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் அதன் சேவை மீண்டும் தொடங்கவுள்ளது.
மேம்படுத்தப்பட்ட குர்னூல் ஏர்போர்ட்
- 2000மீ x 30 மீ அளவிலான ஓடுபாதைகள்
- நான்கு விமான நிறுத்தங்கள்
தொழிற்துறை அமைச்சர் கௌதம் ரெட்டி, மாநில அரசின் இந்தப் பணியை வரவேற்று பேசியுள்ளார். விமான நிலையத்தின் மேம்பாட்டு பணிகள் விரைவாக முடிவடைந்ததை அடுத்து, வரும் மார்ச் மாதம் முதல் அதன் சேவையைத் தொடங்க சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குநர் அனுமதியளித்துள்ளார்.
இதையும் படிங்க:விவசாயிகளுக்கான காங்கிரஸின் நோக்கம் சரியானதாக இருந்ததில்லை- அமித்ஷா