கொல்கத்தா: மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா மாநிலங்களில் குர்மி சமூக மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் பல ஆண்டுகளாக தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும்படி அரசுக்கு கோரிக்கை வைத்துவந்தனர். ஆனால் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தியும், நடவடிக்கை எடுக்காத அரசை கண்டித்தும் செப்டம்பர் 20ஆம் தேதி மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா மாநிலங்களில் உள்ள ரயில் நிலையங்களில் குர்மி சமூக மக்கள் திடீர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, ஜார்க்கண்ட், ஒடிசாவில் போராட்டங்களை கலைக்க செய்தனர். ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள குஸ்தார் மற்றும் கெமசுலி ரயில் நிலையங்களில் மறியல் போராட்டம் 4ஆவது நாளாக தொடர்கிறது. இதனால் 205 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.