பெங்களூரு: கர்நாடக அரசு போக்குவரத்துக் கழக தலைவர் வி.அன்புகுமார் கூறுகையில், "ஒரே நாளில் அதிகபட்சமாக 22.64 கோடி ரூபாய் வசூல் செய்து, அரசு போக்குவரத்துக் கழகம் சாதனை படைத்துள்ளது. தசரா பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், கடந்த 10ஆம் தேதி விடுமுறை முடிந்து மீண்டும் திரும்பினர்.
ஒரே நாளில் ரூ.22.64 கோடி வருவாய் வசூல் - கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம் சாதனை - கர்நாடகா தசரா பண்டிகை
ஒரே நாளில் அதிகபட்சமாக 22.64 கோடி ரூபாய் வருவாய் வசூல் செய்து, கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகம் சாதனை படைத்துள்ளது.
KSRTC
அதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மக்கள் கூட்டம் அலைமோதியதால், ஒரேநாளில் வருவாய் வசூலில் போக்குவரத்துக் கழகம் சாதனை படைத்துள்ளது" என்று கூறினார். இதற்காக போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு, கர்நாடக அரசு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:புதுச்சேரியில் காலி பாக்ஸ்களுடன் பால் முகவர்கள் போராட்டம்!