லுதியான: பஞ்சாப் மாநிலத்தின் லுதியானவில் அனுஜ் என்பவர் வாகனங்கள் மறு உருவாக்கம் செய்யும் கடை நடத்தி வருகிறார். இங்கு மாற்றம் செய்யப்படும் பைக்குகளை திரை உலக பிரபலங்களும், வெளிநாட்டவர்களும் அதிகம் விரும்புகின்றனர். மேலும் தென்னிந்திய திரை உலகிலும் இவரால் மறு உருவாக்கம் செய்யப்படும் பைக்குகள்தான் பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன.
பெயரிடப்படாத இந்த கடையானது 11 ஆண்டுகளுக்கு முன்பு அனுஜ்ஜால் தொடங்கப்பட்டது. அனுஜ்ஜின் குடும்பத்தில் அனைவரும் மருத்துவர்கள், இவரும் பி.பார்ம் படித்துள்ளார். இருப்பினும் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டதால், இத்துறையை தேர்ந்தெடுத்ததாக கூறுகிறார். இவரிடம் 10 தொழிலாளர்கள் பணி செய்கின்றனர்.
பிரபலங்களை கவர்ந்திழுக்கும் மாடல்கள்:பாலிவுட் நடிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் இவரால் மாற்றியமைக்கப்பட்ட பைக் மாடல்களை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். மேலும் பல திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் பைக் மாடல்கள் அனுஜ் உருவாக்கியதே என அவர் கூறுகிறார். மேலும் அனுஜ்ஜிடமிருந்து பைக் வாங்கிய பிரபலங்கள் தங்களது பெயரை வெளியிட வேண்டாம் என்று கூறி இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பிரபலங்களை கவர்ந்திழுக்கும் மாடல்கள் அனுஜ், ஹார்லி டேவின்சன் ரக பைக்குகளை தயாரித்துள்ளார். தற்போது ரமலான் பண்டிகைக்காக முற்றிலும் புதிய மாடல் பைக்கை தயாரித்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். இவரது பட்டறையில் வேலை செய்யும் 10 தொழிலாளர்களும் தனித்தனியான பணியை மேற்கொள்கின்றனர்.
பொழுதுப்போக்கே தொழிலாய் மாறியது:அனுஜ்ஜின் குடும்பத்தினர் அனைவரும் மருத்துவத் துறையில் இருந்தாலும் இவர் மட்டும் பொழுது போக்காய் இந்த துறையை தேர்ந்தெடுத்து பின்னாளில் பிரதான தொழிலாக மாற்றிக்கொண்டுள்ளார். இந்த துறையில் எந்தவித பயிற்சியும் இல்லாமல் பெரிய இடத்தை பிடித்துள்ளார். இவரது ரீமாடல் பைக்குகளை ஓட்ட இந்தியாவில் அனுமதி இல்லை எனத் தெரிவித்தார்.
அமெரிக்காதான் கனவு:அனுஜ்ஜிற்கு அமெரிக்காவில் ஒரு கடை ஆரம்பிக்க வேண்டும் என்பதே பெரும் கனவு எனக் கூறினார். எந்த பைக்கையும் மாற்றாமல் புதிய ரக பைக் ஒன்றை உருவாக்க இருப்பதாக அவர் கூறினார். அவரது வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 18,000 ரூபாயில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலை தற்போது பல லட்சம் ரூபாயை தாண்டி விற்பனையாகி கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: அடங்காத காளைகளின் அலங்காநல்லூர்... வாடிவாசல் மாற்றமா...?