தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விவசாயிகள் போராட்டம் - பிரதமர் மோடியை சந்தித்த ஹரியானா முதலமைச்சர் - மனோகர் லல் கட்டர் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் தீவிரமாக உள்ள நிலையில், அது குறித்து பிரதமர் மோடியிடம் மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் ஆலோசித்துள்ளார்.

Narendra Modi
Narendra Modi

By

Published : Sep 17, 2021, 8:54 AM IST

ஹரியானா முதலமைச்சர் மனோகர் லல் கட்டர் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பானது சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேல் நீடித்தது.

இந்த சந்திப்பின்போது, வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. ஹரியானாவின் கர்னல் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் மீது காவலர்கள் லத்தி தாக்குதல் நடத்தியதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

இது ஆளும் பாஜக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய நிலையில், மோடியுடனான சந்திப்பில் இதுகுறித்து கட்டர் விவாதித்துள்ளார். அத்துடன், அரசு நலத்திட்டத்தை தொடங்கிவைக்க ஹரியானா வருமாறு பிரதமருக்கு அழைப்பு விடுத்ததாகவும் முதலமைச்சர் கட்டர் கூறினார்.

இதையும் படிங்க:பிரதமர் மோடி 71 - மெகா திட்டங்களுடன் பிறந்தநாளை கொண்டாடும் பாஜக

ABOUT THE AUTHOR

...view details